பயிற்சியின் போது நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி..வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் மைதானத்தில் வந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.இன்றைய போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுக்க நாளை நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் மீதே குவிந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது.
அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாழை ஆட்டிக்கொண்டு விராட் கோலி இடம் சென்றது.
இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர். பின்னர் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |