அதிவேகமாக 15,000 ஓட்டங்கள் குவித்த வீரர்: சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
Virat Kohli Reach Fastest 15000 Runs In ODI’s : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
விராட் கோலியின் அடுத்த உலக சாதனை
நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 139 ஓட்டங்களை விராட் கோலி குவித்து அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு வேகமாக 15,000 ஓட்டங்களை குவித்து இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.
சச்சின் இந்த சாதனையை 377 இன்னிங்ஸில் செய்து இருந்த நிலையில், விராட் கோலி வெறும் 303 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
விராட் கோலி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 54 சதங்களை அடித்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் தரவரிசையில் விராட் கோலி 15000 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
5⃣0⃣ up with a 6⃣ 👌
— BCCI (@BCCI) September 27, 2026
1⃣0⃣0⃣ up with a 6⃣ 💪
Virat Kohli meant business tonight 🔥
Updates ▶️ https://t.co/O2cs86p4gq#TeamIndia | #INDvWI | @mflone_ | @imVkohli pic.twitter.com/mM52R4r2nF
452 இன்னிங்ஸ்களில் 18,426 ஓட்டங்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 9000, 10,000, 11,000, 12,000, 13,000 மற்றும் 14,000 ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையை தன்னிடம் வைத்துள்ளார்.