RCB vs MI - எந்த இந்தியா வீரரும் செய்யாத சாதனையை படைத்த விராட் கோலி
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி, பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கோலி அரை சதம்
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய சால்ட், 4 ஓட்டங்கள் எடுத்து, முதல் ஓவரின் 2வது பந்திலே ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணி 15.1 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறது.
[
]முதல் இந்திய வீரர்
இந்த போட்டியில், விராட் கோலி 17 ரன்களை குவித்ததன் மூலம், சர்வேதேச T20 போட்டியில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், சர்வேதேச T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில், விராட் கோலி(13,050) 5வது இடத்தில் உள்ளார்.
14,562 ஓட்டங்களுடன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ்(13,610), பாகிஸ்தானின் சோயிப் மாலிக்(13,557), வெஸ்ட் இண்டீசின் பொல்லார்ட்(13,537) உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |