இங்கிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த ஒரே இந்தியா வீரர்! விராட் கோலி சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், இந்திய அணி அகமதாபாத்தின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரான 356 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது பெரிய வெற்றியைப் பதிவு செய்தது
இந்திய அணியில் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 112 ஓட்டங்கள் குவித்தார். விராட் கோலி 52 ஓட்டங்கள் எடுத்தார்.
விராட் கோலி சாதனை
இப்போட்டியின் மூலம், விராட் கோலி ஆசியாவில் 16,000 ஓட்டங்களைக் கடந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக (4000 ஓட்டங்களுக்கு மேல்) அதிக ஓட்டங்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 3 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக 4000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
விராட் கோலி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5393, இலங்கைக்கு எதிராக 4076, இங்கிலாந்துக்கு எதிராக 4036 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
ஆசியாவில் 312 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 16,025 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 411 போட்டிகளில் 21,471 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் கோலி நான்காவது இடத்தில் இருந்தாலும், சராசரி மற்றும் இன்னிங்ஸ்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 87 போட்டிகளில் 4036 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |