விமர்சனங்களுக்கு ஒரே பதிவில் அதிரடியாக பதிலடி கொடுத்த கோலி!
விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மோசமான துடுப்பாட்டத்தினால் கடும் விமர்சனங்களை விராட் கோலி சந்தித்து வருகிறார். எனினும் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்தது பெரிதளவில் வைரலானது. அதேபோல் சக வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளது, அதன் அருகில் கோலி அமர்ந்திருக்கிறார்.
மேலும் சிறகுகளுக்கு மேல் ஒருவேளை நான் கீழே விழுந்தால்? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழே ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா? என பதில் கொடுக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன. நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் எல்லாம் உள்ளது என இந்த பதிவின் மூலம் அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Perspective pic.twitter.com/yrNZ9NVePf
— Virat Kohli (@imVkohli) July 16, 2022