விராட் கோலி குடிக்கும் பிளாக் வாட்டர் இவ்வளவு விலையா? அப்படி என்ன இருக்கிறது அந்த நீரில்?
விராட் கோலி அவரது விளையாட்டிற்கு மட்டுமல்ல உடல் ஃபிட்னஸிற்கும் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
இந்த ஃபிட்னஸிற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்ல, தீவிரமான டயட்டையும் மேற்கொண்டு வருகிறார்.
அவர் தான் டயட்டில் "பிளாக் வாட்டர்"எனப்படும் கருப்பு தண்ணீரை தான் குடிக்கிறார் என்ற பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த நீரின் விலை லிட்டர் ரூ3-4 ஆயிரம் வரை விற்பனையாகிறதாம். அப்படி என்ன இருக்கின்றது இந்த கருப்பு தண்ணீரில் என்பது பலருக்கும் சந்தேகமாகவே உள்ளது.
அந்தவகையில் இந்த தண்ணீர் என்ன மாதிரியான நன்மைகளை வழங்குகின்றது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
இந்த அப்படி நீரில் என்ன இருக்கிறது தெரியுமா?
இந்த நீரில் இயற்கையாக எடுக்கப்பட்ட fulvic மற்றும் humic ஆசிட்கள் இருக்கின்றன. அவை தான் இந்த நீரில் பல சத்துக்களை ஏற்படுத்துகின்றன என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்மைகள்
- இதில் அதிக அளவு ஆல்கலீன் இருக்கிறது. இந்த நீர் அதிக பிஎச் அளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இது மட்டுமல்லமல் இந்த நீரை அருந்துபவர்களின் தோளை நிறமாக்குகிறது. அவர்கள் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறது.
- மன அழுத்ததில் இருந்து ஒருவரை மீட்டுக்கொண்டுவருகிறது.
- அதிக ரத்த அழுத்தம், நீரழிவு நோய், அதிக கொழுப்பு, ஆகிய நோய்களை கட்டுப்படுகிறது.