கண்ணிமைக்கும் நேரத்தில் ரன்அவுட் செய்த கோலி! வைரலாகும் வீடியோ
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த ரன் அவுட் வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தின்போது ஷாருக் கான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
KING KOHLI EXCELLENCE IN THE FIELD. ?pic.twitter.com/FUQUBsHP9L
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 4, 2024
அவர் 37 ஓட்டங்களில் இருந்தபோது திவாட்டியா ஒரு ரன் எடுக்க முயற்சித்து நிற்க, மறுமுனையில் இருந்த ஷாருக் கான் பாதி தூரம் வரை ஓடிவந்துவிட்டார்.
அப்போது மின்னல் வேகத்தில் செயல்பட்ட கோலி பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஷாருக் திரும்பி கிரீஸுக்குள் செல்வதற்குள் பந்து ஸ்டம்பை தாக்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த ரன்அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |