இன்று IPL திருவிழா! விராட் கோலி பகிர்ந்த டுவிட் என்ன தெரியுமா?
ஐபிஎல்-லின் 16வது சீசன் தொடக்கவிழா இன்று தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி பகிர்ந்த அவரது பத்தாவது மதிப்பெண் தொடர்பான டுவிட் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த கோலி, கடந்தாண்டு கேப்டன்சி பதவியை துறந்தார், இருந்தாலும் கூட பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடுவதாக உறுதியளித்தார்.
இன்று 16வது சீசனுக்கான தொடக்கவிழா நடைபெறவுள்ளது, இந்நிலையில் தனது 10ம் வகுப்பு மார்க் ஷீட்டை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Virat Kohli on Thursday took the internet by storm when he shared a glimpse of his Class X marksheet just days before the Indian Premier League season.#ViratKohli? #IPL2023 #viratkholi #IPLonJioCinema #LetThereBeSport pic.twitter.com/AKNmmpbEqL
— NewsNowNation (@NewsNowNation) March 30, 2023
அதில் தெரியவந்த தகவல்கள்,
விராட் கோலி 2004 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.
விராட் கோலி ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் வாங்கி ஏ1 கிரேடு பெற்றுள்ளார்.
அதேபோன்று மொழிப் பாடமான ஹிந்தியில் விராட் கோலி 75 மதிப்பெண்கள் பெற்று பி1 கிரேட் பெற்றுள்ளார்.
மிகவும் கடினமான கணித பாடத்தில் விராட் கோலி 51 மதிப்பெண்கள் பெற்று சி2 கிரேட் பெற்றுள்ளார்.
இவர் அதிக புள்ளிகளை ஆங்கில மொழிப்பாடத்திலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
இதனை நகைச்சுவையான விதத்தில் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.