என்னுடைய முக்கிய இலக்கு இதுதான், இதற்காக எதுவும் செய்வேன்! விராட் கோலி அதிரடி
இந்திய அணிக்காக எதுவும் செய்வேன் என துடுப்பாட்ட வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி மோசமான ஃபார்மில் தவித்து வரும் நிலையில், தன் மீதான விமர்சனங்களை அவர் புறந்தள்ளியுள்ளார்.
வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எனவே எதிர்வரும் தொடர்களில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கோலி தனது இலக்கு குறித்து கூறுகையில், 'என்னுடைய முக்கிய இலக்கு என்னவென்றால், இந்திய அணியை ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் வெற்றி பெற வைப்பது தான். மேலும், என் அணிக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
zeenews.india
கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 12 ஓட்டங்களும், ஒருநாள் தொடரில் 33 ஓட்டங்களுமே அதிகபட்சமாக கோலி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PC: AFP