மீண்டும் ஒரு நூறு சதவீத வெற்றி! மகிழ்ச்சியில் திளைக்கும் விராட் கோலி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்த போட்டியில் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. எனினும் பேட்டிங்கில் டுபிளிசிஸ் 96 ஓட்டங்களும், பந்துவீச்சில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.
இந்நிலையில், போட்டியில் பெங்களுரு அணியின் சிறப்பான தருணங்களின் புகைப்படங்களை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் மற்றுமொரு ஆட்டம், மற்றுமொரு நூறு சதவீத வெற்றி, முன்னோக்கி, மேல்நோக்கி என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Another game ?
— Virat Kohli (@imVkohli) April 19, 2022
Another win ?
Onwards & Upwards ?@RCBTweets pic.twitter.com/tlELYOl2VO