விராட் கோலியை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்!
மைதானத்தில் விராட் கோலியை பார்த்ததும் நடிகர் ஷாருக்கான் ஓடி வந்து கட்டியணைத்து, முத்தமிட்டு ‘பதான்’ பட பாடலுக்கு இருவரும் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூரு அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி
நேற்று 16வது ஐபிஎல் தொடருக்கான 9வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் கொல்கத்தா அணி துப்பாட்டம் செய்தது. இதில் வீரர் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனையடுத்து, துப்பாட்டம் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் கொல்கத்தா அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா அணி, ஆர்சிபியை வீழ்த்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீராட் கோலியுடம் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்
நேற்று நடைபெற்ற இப்போட்டியை நேரில் காண கேகேஆர் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்திருந்தார்.
அவருடன் அவரது மகன் சுஹானா கான் வந்தார். மேலும், நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் பலர் வந்திருந்தனர். ஷாருக்கானைப் பார்த்ததும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே கோலாகல கொண்டாட்டத்துடன் காணப்பட்டது. இப்போட்டிக்கு பின் கேகேஆர் அணி வீரர்களை சந்தித்து ஷாருக்கான் வாழ்த்து கூறினார்.
அதன் பிறகு, ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட்டார். பின்னர் இருவரும், "ஜோமி ஜொ பதான்" என்ற ஹிந்தி பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
#ViratKohli #KKRvsRCB #KKRvRCB
— ?⭐? (@superking1815) April 6, 2023
Shahrukh Khan meets Virat Kohli.
Two of the best from India! and both of them shaking legs for jhoome jho pathaan pic.twitter.com/PJncZL9tUK
This snap snatched The Kodak Moment Of The Day award ?@iamsrk @imVkohli#KKRvsRCB #ShahRukhKhan #KKR #AmiKKR #RCB #ViratKohli pic.twitter.com/FaRPap6C63
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) April 6, 2023