கோலியின் இந்த முடிவு...அவருடைய அக்கா போட்ட ஒற்றை பதிவு! வைரலாகும் புகைப்படம்
கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவருடைய மூத்த சகோதரி அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்பான டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு பின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்தார்.
இதையடுத்து இந்திய அணிக்கு அடுத்த டி20 கேப்டன் யார் என்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கோலியின் இந்த முடிவு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோலியின் அக்காவான Bhawna Kohli Dhingra தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோலியின் இந்த முடிவு குறித்து தன்னுடைய கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில், கோலி கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த அறிவிப்பை பதிவிட்டு, அதற்கு மேலே விளையாட்டு திறன் என்பது உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் மட்டுமின்றி, சரியான முடிவுகளை எடுப்பதற்கான தெளிவையும் கொடுக்கிறது.
உங்களின் இந்த முடிவை மதிக்கிறோம், கடவுள் ஆசீர்வாதிப்பர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அதை இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.