பந்துவீச வேகமாக ஓடிவந்த பாண்டியாவை கையை காட்டி நிறுத்திய கோலி! கோபத்தில் பந்தை தூக்கி வீசிய வீடியோ
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த போது அவரை கோலி தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ரன்களை வாரி கொடுத்தார், ஒரு விக்கெட்டை கூட அவர் வீழ்த்தவில்லை. போட்டியின் ஒரு கட்டத்தில் பெங்களூர் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடினார், எதிர்திசையில் அவருடன் கோலி நின்று கொண்டிருந்தார்.
— ChaiBiscuit (@Biscuit8Chai) May 19, 2022
அப்போது பந்து வீச பாண்டியா வேகமாக ஓடி வந்த போது மேக்ஸ்வெல் அதை எதிர்கொள்ள தயாராகாமல் இருந்தார். இதை பார்த்த எதிர்திசையில் நின்ற அவர் கூட்டாளி கோலி பாண்டியாவை பந்துவீசுவதை நிறுத்துமாறு கையை காட்டி கூறினார்.
இதனால் வேகமாக ஓடி வந்து கிரீஸ் அருகே நின்ற பாண்டியா கோபத்தில் பந்தை தூக்கி கீழே எறிந்தார்.