ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த கோஹ்லி! பாகிஸ்தானுக்கு எதிராக மிரட்டல்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் செய்து விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்தார்.
புதிய வரலாறு
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சவுத் ஷகீல் (Saud Shakeel) 62 (76) ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 46 (77) ஓட்டங்களும் எடுத்தனர்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, அக்ஷர் மற்றும் ராணா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் விராட் கோஹ்லி இரண்டு கேட்சுகள் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, ஒருநாள் போட்டியில் அதிக கேட்சுகள் செய்த முன்னாள் வீரர் முகமது அசாருதீனின் சாதனையை சமன் செய்திருந்த கோஹ்லி, இப்போட்டியில் அவரை தாண்டி முதலிடம் பிடித்துள்ளார்.
அசாருதீன் 334 போட்டிகளில் 156 கேட்சுகள் செய்துள்ள நிலையில், கோஹ்லி 299 போட்டிகளில் 158 கேட்சுகள் செய்துள்ளார்.
அதிக கேட்சுகள் செய்த இந்திய வீரர்கள்: விராட் கோஹ்லி (158), அசாருதீன் (156), சச்சின் டெண்டுல்கர் (140), ராகுல் டிராவிட் (124), சுரேஷ் ரெய்னா (102).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |