எப்பேற்பட்ட கேப்டன் பாருங்க கோலி! ரசிகர்களை நெகிழ வைத்த வைரல் வீடியோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்த கோலி செய்த செயலில் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கோலி நேற்று அறிவித்தார். இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் கோலி தான் என அவருக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு கேப்டனாக எப்படி அணி வீரர்களை கோலி உற்சாகப்படுத்தினார் என்பதை காட்டும் நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அதன்படி சமீபத்தில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போதும், விக்கெட்களை வீழ்த்தும் போதும் அவர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்துமாறு பெஞ்சில் உட்கார்ந்திருந்த இந்திய வீரர்களை கேட்டு கொண்டார் கோலி.
Kohli celebrates the wickets.. looks towards his team dug out and shouts 'Keep Clapping Boys.. Keep Clapping' and this follows..
— Kanav Bali? (@Concussion__Sub) January 12, 2022
This guy just creates an amazing atmosphere in the match.. pic.twitter.com/ens77zqg3M
அதன்படி தொடர்ந்து கிளாப் செய்து பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்துமாறு கூறினார். அவர்களும் ஒரு ரிதத்தில் அழகாக கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்த இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதை தொடர்ந்து இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில் எப்பேற்பட்ட கேப்டனாக கோலி இருந்திருக்கிறார், எந்த அளவுக்கு வீரர்களை அவர் உற்சாகப்படுத்துகிறார் பாருங்கள் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டனர்.
இந்த தொடரை மைதானத்தில் உட்கார்ந்து காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.