ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரம்மாண்ட சாதனை படைத்த கோலி!
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடித்தார்.
கோலி அதிரடி ஆட்டம்
பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணி துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
பாப் டூ பிளிசிஸ் 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி பவுண்டரிகளை விரட்டினார். அதிரடியில் மிரட்டிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Third 5⃣0⃣ in a row this season at the Chinnaswamy stadium!
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 15, 2023
Virat in RED hot form ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvDC pic.twitter.com/dydEDhpSBG
மூன்றாவது அரைசதம்
நடப்பு ஐபிஎல் தொடரில் கோலி அடித்த மூன்றாவது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்தபோது லலித் யாதவ் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
விராட் கோலி சின்னசாமி மைதானத்தில் மட்டும் 2500 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி 115 ஐபிஎல் போட்டிகளில் ஒரு சதம், 37 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2️⃣5️⃣0️⃣0️⃣ out of the ♾️ reasons why we ❤️ King Kohli! ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 15, 2023
Most by any player at a single venue in the IPL! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvDC @imVkohli pic.twitter.com/DzWQLsfq8G