RCB வீரர்களுக்கு சொந்த உணவகத்தில் டிரீட் கொடுத்த விராட் கோலி! வைரல் புகைப்படம்
ஆர்சிபி வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு விராட் கோலி தனது சொந்த ஹோட்டலில் விருந்து வழங்கி உபசரித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா சென்ற RCB
ஐபிஎல் 2023 ல் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி செவ்வாய்க்கிழமை கொல்கத்தா சென்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு நடக்க இருக்கும் RCB, KKR இடையிலான போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளும் புதன்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியை தொடங்க உள்ளது.
RCB வீரர்களுக்கு கோலி விருந்து
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடக்க இருக்கும் பலப்பரீட்சை-க்கு முன்னதாக, RCB வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை இரவு விராட் கோலி விருந்து வழங்கி உபசரித்துள்ளார்.
அனைவரும் கொல்கத்தாவில் உள்ள ஒன் 8 கம்யூன் என்ற விராட் கோலியின் சொந்த உணவகத்தில் உணவருந்தி மகிழ்ந்தனர்.
Virat Kohli & @RCBTweets Boys Enjoyed Great Food & Good Times At #one8commune Kolkata! 👌@imVkohli • #IPL2023 • #ViratGang pic.twitter.com/AO1gB6Q0Mj
— ViratGang (@ViratGang) April 4, 2023
மேலும் விராட் கோலியின் சொந்த உணவகத்தில் ஆர்சிபி வீரர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.