சக வீரருக்காக ரன்களை ஓடி ஓடி எடுப்பவர் விராட் கோலி: வார்னர் புகழாரம்
சக வீரருக்காக ஓடி ஓடி உழைப்பவர் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வார்னர்
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து விளையாடிய 21 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி நெதர்லாந்து ஆட்டமிழந்தது.
பின்பு, வெற்றி குறித்து பேசிய டேவிட் வார்னர், "சென்னையில் நடைபெற்ற இந்த முதல் போட்டி சவால்கள் நிறைந்தது. இந்த ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாடுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது. அதனால், அதற்கான அடிப்படை விஷயங்களை செய்தேன்.
இந்த நாள் மேக்ஸ்வெல்லுக்கு முக்கியமானது. ஸ்டீவ் ஸ்மித் ரன் சேர்ப்பதற்காக நான் 2 ரன்கள் எடுக்க ஓடினேன். அதனால் அவர் என்னை களைப்படைய வைத்து விட்டார்" என்றார்.
கோலி குறித்து பேசியது
மேலும் பேசிய அவர், "என்னுடைய நினைவில் நிச்சயம் இருக்கும். என்னுடைய பிட்னஸில் எப்போதும் நான் பெருமிதம் கொள்வேன். என்னைப்போலவே விராட் கோலியும் செய்வார். சக வீரருக்காக அவர் ஓடி ஓடி ரன்களை எடுப்பார்.
நாங்கள் வாழ்வதே உலகக்கோப்பையில் வெல்வதற்காக தான். உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் பாண்டிங் பெயர்களுக்கு இடையில் இருப்பது பெருமையாக உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |