விராட் கோலிக்கு காயம்...இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலக வாய்ப்பு!
விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே என தெரியவந்துள்ளது.
இந்திய அணி 1 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரில் இன்னும் 3 ஒருநாள் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், நாளை நடைபெற விருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த போட்டியில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமே என தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய சாலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்... சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
மேலும் அவர் இன்றைய வலைப்பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது.