ஐசிசியின் தலைவரான ஜெய் ஷாவுக்கு வாழ்த்து கூறிய கோஹ்லி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷாவுக்கு, இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா BCCIயின் செயலாளராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஐசிசியின் தலைவராகவும் தேர்தல் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "ஐசிசியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜெய் ஷாவுக்கு வாழ்த்துக்கள் பல. நீங்கள் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |