போருக்கு தயாராகும் விராட் கோலி! அசால்ட்டாக பளுவை தூக்கும் வீடியோ.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் இந்திய வீரர் விராட் கோலி
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 43 சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 சதம் விளாசியுள்ளார்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆகத்து 27ஆம் திகதி ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்காக ஒவ்வொரு அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடற்பயிற்சி செய்து தனது உடலினை உறுதி செய்து வருகிறார். அவர் உடற்பயிற்சி கூடத்தில் பளுவை தூக்கி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
?️♂️? pic.twitter.com/NOvAD9uutT
— Virat Kohli (@imVkohli) August 17, 2022
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், கோலி 71 சதம் விளாச தயாராகி வருகிறார் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் விளாச தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.