கோலி அடித்த அந்த ஒரு சிக்ஸர்! இதுபோதும் என கொண்டாடும் ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், கோலி அடித்த சிக்ஸரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
அவரது ரசிகர்கள் ஒவ்வொரு ஆட்டத்தையும் எதிர்பார்த்து ஏமாந்து போவது நேற்றும் தொடர்ந்தது. அதிரடியாக பவுண்டரி அடித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்த கோலி, அடுத்ததாக சிக்ஸர் ஒன்றை ஸ்டைலாக விளாசினார்.
Virat kohli six today?#ViratKohli #INDvsEND #ENGvIND pic.twitter.com/iYroNvga11
— Rohit (@itzRohitKY) July 10, 2022
இதனைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ரசிகர்கள் விரக்தி அடைந்தாலும், அவர் அடித்த சிக்ஸர் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, இது ஒன்று போதும் எங்களுக்கு என வைரலாக்கி வருகின்றனர்.