அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ், கோலி அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்கு
பெங்களூர் மற்றும் பஞ்சாபிற்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்ற பெங்களூர் அணி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொகாலியில் இன்று துவங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது.
@mykhel.com
தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி 137 ஓட்டங்கள் குவித்துள்ளார். விராட் கோலி 47 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
175 ஓட்டங்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.
@mykhel.com
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ஓட்டங்கள் குவித்தவர் நாதன் எலிஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
@mykhel.com
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதில் லம்ரோர் மற்றும் ஷக்பஷ் அஹ்மத் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளனர்.
@mykhel.com
இதையடுத்து, 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. இப்போட்டியின் வெற்றி இரு அணிக்கும் முக்கியம் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.