இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயம்! மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட கோலி
2022 ஆம் ஆண்டு கடைசி சூரிய உதயம் என கூறி விராட் கோலி தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விராட் கோலி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
To the last sunrise of 2022 ❤️ pic.twitter.com/0k6oVFgzxx
— Virat Kohli (@imVkohli) December 31, 2022
கடைசி சூரிய உதயத்திற்கு
இதையடுத்து கோலி குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலியின் பதிவில், 2022 இன் கடைசி சூரிய உதயத்திற்கு என பதிவிட்டு மனைவி, குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதே போல அனுஷ்கா சர்மாவும் தனது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் வேறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.