விராட் கோலி சதமடிக்கும் வரை திருமணம் இல்லை! அடம்பிடித்த இளைஞருக்கு கிடைத்த சூப்பர் பரிசு
விராட் கோலி 71வது சர்வதேச சதம் அடிக்கும் வரை திருமணம் செய்யமாட்டேன் என கூறிய இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் மணநாளில் சிறந்த பரிசு கிடைத்துள்ளது.
கோலி சதமடிக்கும் வரையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகர் அமன் அகர்வால். அகர்வால் கோலி 71-வது சதத்தை பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஏன்னென்றால், எல்லா வீரர்களுக்கும் எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை கோலி எதிர்கொண்டு இருந்தார். அவர் 2019 நவம்பரில் 70-வது சதத்தை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிவு செய்த நிலையில் பின்னர் சதமடிக்க முடியாமல் திணறினார்.
"I asked for the 71st century but he scored 74th on my special day" ❤️❤️❤️@imVkohli @AnushkaSharma @StayWrogn pic.twitter.com/zHopZmzKdH
— Aman Agarwal (@Aman2010Aman) January 16, 2023
74வது சதம்
இந்த நிலையில் கடந்த 2022 செப்டம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தனது 71வது சர்வதேச சதத்தை விளாசினார் இந்த சூழலில் அகர்வாலுக்கு கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடந்துள்ளது.
அன்றைய தினம்தான் கோலி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 74-வது சர்வதேச சதத்தை பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து அகர்வாலின் டுவிட்டர் பதிவில், நான் 71-வது சதம்தான் கேட்டேன். ஆனால் எனது வாழ்நாளின் ஸ்பெஷல் நாளன்று அவர் 74-வது சதம் பதிவு செய்துவிட்டார் என்று பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.