ஐபிஎல்! இலங்கை பவுலர் பந்தில் கோல்டன் டக் ஆன கோலி... துள்ளிகுதித்து கொண்டாடிய வீடியோ
ஐபிஎல் போட்டியில் இலங்கையை சேர்ந்த துஷ்மந்த சமீரா பந்துவீச்சில் முதல் பந்திலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆன வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூர் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். அதன்படி, லக்னோ அணிக்காக விளையாடும் இலங்கையை சேர்ந்த துஷ்மந்த சமீரா பந்தை எதிர்கொண்ட கோலி ஸ்டம்பிற்கு வெளியே அதை அடித்தார்.
Golden duck for virat kohli
— Sarthak Pathak (@imsarthak7774) April 20, 2022
Ab to neend se utthh jaoo mere sher 🐅🐅😔😔
Reaction of him makes me cry 🥺🥺#ViratKohli𓃵#virat#IPL2022 #RCBvsLSG pic.twitter.com/b6v1HW74Ua
இதையும் படிங்க: ஐபிஎல்! சிஎஸ்கே அணி தொடர்ந்து உதைபடும் சூழலில் தோனி, ஜடேஜா எடுத்த முடிவு
பந்தானது நேராக தீபக் ஹூடா கைக்கு சென்றது, அதை எளிதாக கேட்ச் பிடித்தார் தீபக். முக்கிய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து கொண்டாடினார் சமீரா.
அவர் இந்த போட்டியில் மொத்தமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலியை கோல்டன் டக் முறையில் வெளியேற்றிய நான்காவது பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா என்பது குறிப்பிடத்தக்கது.