புது செல்போனை தொலைத்த விராட் கோலி! அவரை மேலும் கடுப்பேத்திய ஒரு பதிவு
புது செல்போன் தொலைந்துவிட்டதாக விராட் கோலி போட்ட பதிவுக்கு பிரபல நிறுவனம் பதில் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமூகவலைதளத்தில் சமீபத்தில் போட்ட பதிவில், இருப்பதிலேயே மிக சோகமான விஷயம் என்றவென்றால், வாங்கிய புது போனை பெட்டி திறந்து பிரித்து கூட பார்க்காமல் பறிகொடுப்பது தான். யாராவது அதை பார்த்தீர்களா? என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் விராட் கோலி ஒரு புது செல்போனை வாங்கி அதனை டப்பாவை விட்டு திறந்து பார்ப்பதற்கு முன் தொலைத்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதற்கு ஜோமேட்டோ நிறுவனம் அளித்த ரிப்ளை ஒன்று டிரெண்டாகி வருகிறது.
dna
கவலை வேண்டாம் கோலி, ஐஸ் க்ரீம் ஒன்றை ஆர்டர் செய்து அண்ணி அனுஷ்காவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள் எல்லாம் கூலாகிவிடும் என்று பதிவிட்டு இருந்தது.
ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விராட் கோலியை மேலும் வெறுப்பேற்றும் விதமாக ஜோமேட்டோ அளித்த பதில் இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.