கோலி அசிங்கப்படுத்தியதை மறக்கவே முடியாது! லார்ட்ஸ் தோல்விக்கு பின் முன்னாள் வீரர் போட்ட பதிவு
இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மிகவும் இழிவாக மோசமாக பேசக் கூடியவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, அனல் பறந்தது. குறிப்பாக இரு நாட்டு வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து வீரர்கள் பும்ரா, ஷமி போன்றோரை வம்பிழுக்க, அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில், விராட் கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களிடம் வார்த்தை போரில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான Nick Compton தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கோஹ்லி வாய் மிகவும் மோசமான வாய் என்று கூறியுள்ளார்.
அதில், கோஹ்லிக்கு தான் இருப்பதிலேயே மிகவும் இழிவாக, மோசமாக பேசக்கூடிய வாய் உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு அவர் என்னை அசிங்கப்படுத்தியதை மறக்கவே முடியாது.
ஒருவரின் செயலே அவரின் குணத்தை முடிவு செய்துவிடும். அப்படி தான் இப்போது கோஹ்லி செயல், என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைசிறந்த வீரர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் அப்போ இங்கிலாந்து வீரர்கள் மட்டும் ஸ்ட்லெஜிங்கில் ஈடுபட்டது சரியாக என்று அவருடைய டுவிட்டுக்கு கீழே கேள்வி எழுப்பி வருகின்றனர்.