நீயே பேட்டிங் ஆடு! கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கை நோக்கி கோலி காட்டிய சைகை... வைரல் வீடியோ
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கிடம் கோலி காட்டிய சைகை தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது. இந்நிலையில், போட்டிக்கு இடையே கோலி செய்த விஷயம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
The special moment when Virat Kohli told Dinesh Karthik to just continue the hitting. What a player! pic.twitter.com/nGxDiFH9SY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 2, 2022
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். மறுபக்கம் 49 ஓவர்களுடன் கோலி நின்று கொண்டிருந்தார். முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.
அப்போது, நான்கு பந்துகள் முடிந்ததும், கோலி அரை சதமடிக்க வாய்ப்பு தரவா என அவரிடம் கார்த்திக் கேட்டார். ஆனால், கோலியோ நீங்களே ஆடுங்கள் என்பது போல சைகை காட்டினார். இதன் பின்னர், ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு விரட்டினார் தினேஷ் கார்த்திக்.
ஒரு வேளை அந்த பந்தில் அவர் சிங்கிள் கொடுத்திருந்தால், கோலி அரை சதமடிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கலாம். ஆனால், தனது அரை சதம் முக்கியம் என சுயநலமாக சிந்திக்காமல் அணிக்கு வர வேண்டிய ரன்கள் தான் முக்கியம் என கோலி சிங்கிள் வேண்டாம் என கூறிவிட்டார்.