மனைவியிடம் வீடியோ அழைப்பில் பேசிய கோலி! ரசிகர்களுக்கும் அதை காட்டி உற்சாகப்பட்ட வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் வீடியோ அழைப்பில் பேசியதை ரசிகர்களுக்கு காட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. போட்டிக்கு பின்னர் இந்திய அணி நட்சத்திர வீரர் கோலி மைதானத்தில் இருந்து அணி பேருந்தில் ஹொட்டலுக்கு புறப்பட்டார்.
விராட் கோலிக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் பலரும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை தனது மனைவியும் பார்க்க வேண்டும் என்பதற்காக பேருந்தில் இருந்தவாரே வீடியோ அழைப்பில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவிடம் பேசினார்.
@imVkohli In Video Call With @AnushkaSharma While Returning From Match And Shows It To Fans ???#Virushka #INDvSA pic.twitter.com/YRVLNwZCiq
— virat_kohli_18_club (@KohliSensation) September 29, 2022
அப்போது அங்கு பல ரசிகர்கள் திரண்டு விராட் கோலிக்கு கை காட்டினர். இதனை அடுத்து தன் மனைவியும் கூட்டத்தை பார்ப்பதற்கு ஏதுவாக செல்போனையும் விராட் கோலி திருப்பினார். அப்போது ரசிகர்கள் அனுஷ்கா சர்மாவுக்கும் கைகாட்டினார்கள்.