நீதிமன்றத்தை நாடிய விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா! காரணம் இதுதான்
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
விற்பனை வரித்துறை
கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பிரபல திரைப்பட நடிகையாகவும் உள்ளார். அவர் 2012-13 முதல் 2013-14 காலக்கட்டத்தில் பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமானம் ஈட்டியதோடு, நிகழ்ச்சியின் பதிப்புரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த வேளையில் அனுஷ்கா சர்மாவுக்கு விற்பனை வரித்துறை (Sales Tax department) வழக்கத்தை விட அதிகளவில் வரி கட்டும்படி கூறியதாக கூறப்படுகிறது.
dnaindia
மனுத்தாக்கல்
அவர் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விருது நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பதிப்புரிமை பெற்றது தொடர்பாக 2012-13ல் ரூ.1.2 கோடி செலுத்த கூறப்பட்டு இருந்தது.
அதன்பிறகு இது 2013-14ல் ரூ.1.6 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா 4 முறை மனுக்கள் தாக்கல் செய்தார். அவர் தனது வரி ஆலோசகர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்ததால் அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதையடுத்து அனுஷ்கா சர்மா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவுக்கு பதிலளிக்குமாறு விற்பனை வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை வருகிற பிப்ரவரி 6-ந் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
filmibeat