கோடிக்கணக்கில் சாம் கரணை வாங்கினால் மட்டும் வென்றுவிட முடியாது - ஷேவாக் கருத்து
கோடிக்கணக்கில் வீரர் சாம் கரணை வாங்கினால்மட்டும் போட்டியில் வென்றுவிட முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் விரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்பை வீழ்த்திய பெங்களூரு
நேற்று மாலை மொகாலியில் ஐபிஎல் போட்டி 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் முதலில் டாஸ் போடப்பட்டது.
இந்த டாஸ்கில் பஞ்சாப் அணி வென்றது. இதனையடுத்து, இந்த அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய பெங்களூரு அணி, இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை மட்டும் எடுத்தது அந்த அணி. இதன் பின்பு, 175 ஓட்டங்கள் இலக்குடன் பஞ்சாப் அணி மைதானத்தில் களத்தில் இறங்கியது.
இப்போட்டியின் முடிவில், பெங்களூரு அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
ஷேவாக் கருத்து
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாய் அணி படுதோல்வி அடைந்தது.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் விரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
அனுபவத்தை உங்கள் யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. விளையாடிக் கொண்டே இருந்தால்தான் அனுபவம் கிடைக்கும். சுமார் ரூ.18 கோடிக்கு சாய் கரணை வாங்கியதால் மட்டும் போட்டிகளில் அவரால் வெற்றி பெற்று விட முடியாது. வெற்றி பெறுவதற்கு அதிக அனுபவம் வேண்டும். இன்னும் அவர் அந்த அனுபவத்தை கற்றக்கொள்ள வேண்டும்.