விண்வெளி சுற்றுலா: முதல் பயணத்தை முடித்து வரலாறு படைத்த விர்ஜின் கேலக்டிக்
அமெரிக்க விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) முதல் வணிக விண்வெளி பயணத்தை நிறைவு செய்து வரலாறு படைத்துள்ளது.
ரிச்சர்ட் பிரான்சன் என்பவரால் நிறுவப்பட்ட விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் அதன் முதல் வணிக விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்தது.
நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்ட Galactic 01 எனப்படும் விமானம் 90 நிமிட நீண்ட பயணத்தை முடித்துவிட்டு 9:30 மணிக்கு திரும்பியது.
Reuters
கேலக்டிக் 01 ரொக்கெட் 3 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் ஆறு பேருடன் விண்வெளியில் பறந்தது.
முதல் பயணத்தில் பயணிகளாக 2 இத்தாலிய விமானப்படை கர்னல்கள் மற்றும் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் விண்வெளி பொறியாளர் பயணித்தனர். இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பயிற்சியாளர் அவர்களை அழைத்துச் சென்றனர்.
Virgin Galactic
நியூ மெக்சிகோவின் பாலைவனத்தில் இருந்து புறப்பட்ட ரொக்கெட் 80 கி.மீ உயரத்தில் பறந்து விண்வெளியில் நுழைந்தது.
பூமியில் இருந்து 80 கி.மீ.க்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் நாசா மற்றும் அமெரிக்க விமானப்படையால் விண்வெளி வீரர்களாக கருதப்படுகிறார்கள்.
Reuters
சூப்பர்சோனிக் ரொக்கெட் வேகம், மைக்ரோ ஈர்ப்பு விசை மற்றும் விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பதற்கு டிக்கெட்டுகள் 450,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ. 13.86 கோடி) வரை செலவாகும். ஏற்கனவே 800 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
Virgin Galactic
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்குப் பிறகு பயணிகளை வணிக ரீதியாக விண்வெளிக்கு அனுப்புகிறது விர்ஜின் கேலக்டிக்.
Virgin Galactic
Reuters
Elon Musk SpaceX, Amazon Jeff Bezos Blue Origin, Richard Branson Virgin Galactic, Space Tourism, first commercial rocket plane flight to space
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |