இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு: வர்ஜீனியா கியூஃப்ரே மரணம்!
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே 41 வயதில் காலமானார்.
வர்ஜீனியா கியூஃப்ரே மரணம்
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே(Virginia Giuffre) தனது 41வது வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அன்று என்.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில், பல ஆண்டுகளாக மேற்கு ஆவுஸ்திரேலியாவின் நீர்காப்பி நகரில் வசித்து வந்த அவர், தனது பண்ணை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான குடும்பத்தினரின் அறிக்கையில், "வர்ஜீனியா நேற்று இரவு மேற்கு ஆவுஸ்திரேலியாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம், கூறப்பட்டுள்ளது.
மேலும், "பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தலுக்கு ஆளான அவர், தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் புகார்
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், யோர்க் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிராக கியூஃப்ரே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தபோது சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.
அவர் 17 வயதாக இருந்தபோது ஆண்ட்ரூவுடன் உறவு கொண்டதாகவும், பில்லியனரும், குழந்தைகள் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூ இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார், மேலும் அவர் எந்த கிரிமினல் குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கியூஃப்ரே மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சமரச உடன்பாட்டை எட்டினர்.
இந்த உடன்பாட்டின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக கியூஃப்ரேயின் தொண்டு நிறுவனத்திற்கு கணிசமான நன்கொடை வழங்கப்பட்டதாக பரவலாக தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |