இந்த உலகக்கோப்பையில் இது தான் சூப்பர் ஆட்டம்! அவர் தான் போட்டியையே மாத்திட்டாரு... வியந்து பாராட்டிய சேவாக்
டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணியை ஜாம்பவான் சேவாக் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை அரையுறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தின் அபாரமான ஆட்டத்தை பல்வேறு பிரபல ஜாம்பவான்களும் புகழ்ந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவில், என்ன ஒரு பிரில்லியண்ட் கிரிக்கெட். போட்டியை வென்றதோடு இதயங்களையும் வென்றது நியூசிலாந்து.
மிட்செலின் கிரேட் இன்னிங்ஸ், அவருக்கு உறுதுணையாக கான்வே, நீஷம் இருந்தனர். கடைசியில் பவுண்டரி எல்லையில் பேர்ஸ்டோவுக்கு நிகழ்ந்தது 2019 இறுதிப் போட்டியில் போல்ட்டுக்கு நிகழ்ந்ததை நினைவு படுத்தியது, என்றார்.
விரேந்திர சேவாக் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “இந்த உலகக்கோப்பையில் பிரமாதமான ஆட்டம் என்றால் இதுதான். வாவ் டேரில் மிட்செல். ஜிம்மி நீஷம் கேம் சேஞ்சர். நியூசிலாந்து பரபரப்பான ஆட்டம். இறுதிக்குள் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்” என்றார்.