இதுமாதிரி யாருமே செய்ய மாட்டாங்க! CSK முன்னாள் கேப்டன் தோனி குறித்து சேவாக் வெளிப்படை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் வீரேந்திர சேவாக்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஒரு வீரராக மட்டுமே களமிறங்குகிறார் தோனி.
ஏனெனில் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி குறித்து பேசிய ஜாம்பவான் வீரேந்திர சேவாக், ஒரு பவுலர் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அடுத்தடுத்து ஓவர்களை வழங்கி அப்போதே அந்த பவுலரை முழுமையாக தோனி பயன்படுத்திவிடுவார்.
ஆனால், மற்ற கேப்டன்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆனால் கேப்டனாக இருந்த தோனியின் இந்த அணுகுமுறைதான் அவரை சிறப்படையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.