அமெரிக்க கனவுக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் செல்லும் 500 ஆண்டுகள் பழமையான கோவில் - பூஜை, காணிக்கை தேவையில்லை
அமெரிக்க H-1B விசா கட்டணத்தை 100,000 டொலராக உயர்த்தும் திட்டம் தொடர்பான கவலைகள் எழுந்துள்ள நிலையில், தெலுங்கானாவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான சில்கூர் பாலாஜி கோவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹைதராபாத் புறநகரில் அமைந்துள்ள இந்த கோவில், "விசா பாலாஜி கோவில்" என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வேலை பெற விரும்பும் பல இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது ஒரு ஆன்மிக நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த கோவிலுக்கு விசா விண்ணப்பதாரர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர்.
விசா விண்ணப்பதாரர்களின் பெற்றோர்களும், அமெரிக்காவில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்காக பிராத்தனை செய்ய இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.
இந்த கோவிலில் பூஜை, காணிக்கை, VIP அனுமதி எதுவும் இல்லை. பக்தர்கள் வெறும் பிராத்தனையுடன் 11 சுற்று பிரதிக்ஷணம் செய்து, வேண்டுதல் நிறைவேறிய பின் 108 முறை செய்ய வேண்டும்.
1990-களில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் விசா நேர்முகத் தேர்வுக்கு முன் இங்கு வந்ததிலிருந்து கோவிலின் புகழ் பரவியது.
இந்த கோவில்,அமெரிக்க கனவுக்கான ஆன்மிக வழிகாட்டியாக பலருக்கும் நம்பிக்கையை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Chilkur Visa Balaji Temple, Hyderabad Visa Balaji Temple, H1B visa