22 பில்லியன் டொலர் விசா மோசடி... இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குத் தொடர்பா?

H-1B visa Green Card
By Arbin Oct 09, 2026 11:20 AM GMT
Report

The US Department of Labor has uncovered as $22 billion in visa fraud: அமெரிக்கத் தொழிலாளர் துறை 22 பில்லியன் டொலர் மதிப்பிலான விசா மோசடியைக் கண்டறிந்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் விசா மற்றும் கிரீன் கார்டு சேவையில் நடக்கும் மோசடிகளையும், முறைகேடுகளையும் கண்டறியத் தனி டாஸ்க் போர்ஸ் அமைத்தது.

8 நிறுவனங்கள்

இதன் மூலம் 22 பில்லியன் டொலர் மதிப்பிலான விசா மோசடியைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்கத் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

22 பில்லியன் டொலர் விசா மோசடி... இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குத் தொடர்பா? | Visa Fraud Suspends Green Card

அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவில் செயல்படும் பிற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதில் பலகட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த டாஸ்க் போர்ஸ் கண்டறிந்த விடயங்களின் அடிப்படையில் தான் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது 8 முன்னணி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் PERM திட்டத்தின் கீழ் சேவை பெறுவதில் தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த தடை மூலம் காக்னிசென்ட், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, மைக்ரோசாப்ட், அடோப் ஆகிய 8 நிறுவனங்கள் PERM திட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியாது, அதேபோல் தடை செய்யப்பட்ட காலத்தில் ஏற்கனவே விண்ணப்பம் செய்த PERM விண்ணப்பத்தையும் ஆய்வு செய்ய முடியாது.

இன்னும் உக்கிரமாகப் போராடுவோம்... பிரெஞ்சு மாணவர் போராட்டக்காரர்கள் உறுதி

இன்னும் உக்கிரமாகப் போராடுவோம்... பிரெஞ்சு மாணவர் போராட்டக்காரர்கள் உறுதி

22 பில்லியன் டொலர் விசா மோசடி குறித்து அமெரிக்கத் தொழிலாளர் துறைச் செயலர் கீத் சாண்டர்லிங் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கட்டமைப்பு ரீதியிலான மோசடிகள் அதாவது Systemic Fraud நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த 22 பில்லியன் டொலர் விசா மோசடியில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்கக் கல்லூரிகள் தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விசா கிடைப்பதை எளிதாக்கும் மையங்களாகச் செயல்படுவதாக கீத் சாண்டர்லிங் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டினர் தங்களது தகுதிகள் குறித்து தவறான அல்லது போலியான தகவல்களை அளித்து வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். அப்படி வரும் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவின் சில பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள்

இதனால் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை பெறுவது மட்டும் அல்லாமல் பின்னர் வேலைவாய்ப்பு வாயிலாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்குவதற்கும் குடியுரிமை பெறுவதற்கும் இந்த வேலைவாய்ப்புகள் வழிவகுத்துள்ளது என்றும் கீத் சாண்டர்லிங் குற்றம்சாட்டினார்.

22 பில்லியன் டொலர் விசா மோசடி... இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குத் தொடர்பா? | Visa Fraud Suspends Green Card

மேலும், 2009ஆம் ஆண்டில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் விசா விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 2,30,000 பேருக்கு ஹெச்1பி விசாவும், 1,00,000 பேருக்கும் PERM திட்டம் கீழ் கிரீன் கார்டும் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் அமெரிக்க ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார். 8 நிறுவனங்கள் மீதான தடை நடவடிக்கை என்பது அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக எடுக்கப்பட்டவை. இந்த நடவடிக்கை மூலம் மோசடிகளைத் தடுப்பது, குடியுரிமை கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US