விசா காலாவதியாகியும் பிரித்தானியாவிலேயே தங்கிவிடும் வெளிநாட்டவர்கள்: ஆனால்...
பிரித்தானிய அரசு ஒருபக்கம் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தன்னாலான முயற்சிகளை மேர்கொண்டுவருகிறது. மறுபக்கமோ, பிரித்தானியாவுக்குள் வந்த பலர், தங்கள் விசா காலாவதியாகியும் பிரித்தானியாவிலேயே தங்கிவிடுகிறார்கள்.
விசா காலாவதியாகியும் பிரித்தானியாவிலேயே தங்கிவிடும் வெளிநாட்டவர்கள்
பிரித்தானிய ஊடகம் ஒன்று, சமீபத்தில், மாணவர் விசாவில் பிரித்தானியாவுக்கு வந்து, தங்கள் விசா காலாவதியானபின்பும் பிரித்தானியாவிலேயே தங்கிவிட்ட சிலரை பேட்டி கண்டுள்ளது.
அந்த ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் இந்தியாவிலிருந்து வந்த இருவரை சந்தித்தார். அப்போது, தாங்கள் இந்தியாவிலிருந்து வந்து, தங்கள் விசா காலாவதியானபின்பும் பிரித்தானியாவிலேயே தங்கிவிட்டதைக் குறித்து அவர்கள் அந்த ஊடகவியலாளரிடம் விளக்கினார்கள்.
தனபால் என்பவர், மாணவர் விசா ஒன்றில் பிரித்தானியா வந்துள்ளார். உண்மையில், இந்தியாவில் அரசியல் பிரச்சினை காரணமாக பொலிசாருடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதால், 7,000 பவுண்டுகள் செலவு செய்து பிரித்தானியாவிலுள்ள பல்கலை ஒன்றில் படிப்பதற்காக விசா பெற்று பிரித்தானியா வந்துள்ளார்.
ஆனால், படிப்பு மிகவும் கடினமாக இருந்ததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கைக்கு கிடைத்த சின்னச் சின்ன வேலைகளை செய்து பிழைப்பு நடத்திவருகிறார்.
அதேபோல, சுரேஷ் என்பவர், ஏழு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார். அவரது விசாவும் காலாவதியான பின்பும், அவர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவருகிறார்.
விடயம் என்னவென்றால், அவரது வேலைக்கு அவருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லையாம். அதற்கு பதிலாக தான் தோட்ட வேலை பார்க்கும் வீட்டில் தனக்கு பழைய உடைகள் தருவதாகத் தெரிவித்துள்ளார் சுரேஷ்.
அரசிடம் விவரங்கள் இல்லை
இப்படி ஏராளமானோர் விசா காலாவதியான பிறகும் பிரித்தானியாவில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களைக் குறித்த புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணியான வாசுகி.
இன்னொரு பக்கமோ, இப்படி விசா காலாவதியான பிறகு தங்கும் பலர் கஷ்டப்படுவதாக தெரிவிக்கிறார் அவர். அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள், தலைமறைவாகிவிடுகிறார்கள் என்கிறார் வாசுகி.
பிரித்தானியாவில், புலம்பெயர்தல் அமைப்பு நிலைகுலைந்துபோய்விட்டதாக தெரிவிக்கும் வாசுகி, சிலரோ, தங்கள் விசா காலாவதியானபிறகும் தாங்கள் பிரித்தானியாவில் தங்கமுடியும் என்பதையும், தங்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெரிந்தே பிரித்தானியாவுக்கு வருகிறார்கள் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |