நடிகர் விஜய் மீது செருப்பு வீசியது குறித்து விஷால் கூறிய கருத்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவில் பங்கேற்ற நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் இரங்கல்
கடந்த மாதம் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு மறைவுக்கு நேரில் வந்த நடிகர் விஜய் கண்ணீர் விட்டு அழுது இரங்கல் தெரிவித்துவிட்டு சென்றார்.
அவர் கார் ஏறும்போது கூட்டத்தில் இருந்து யாரோ அவர் மீது காலணியை வீசியுள்ளனர். இது பெரும் சர்ச்சையானது.
விஷால் கருத்து
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.
அப்போது அவர், 'நான் ஒரு நடிகராக, அரசியல்வாதியாக, சமூக சேவகராக இருந்த அவரின் ரசிகன். 19ஆம் திகதி கண்டிப்பாக நடிகர் சங்கம் சார்பாக நங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அமைத்திருக்கிறோம். அம்மாவையும், மகன்களையும் வருமாறு விண்ணப்பம் வைத்துள்ளோம். காமராஜர் அரங்கத்தில் அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'கூட்டம் இருக்கும்போது யார் செருப்ப தூக்கி அடிச்சாங்க, எதுக்கு அடிச்சாங்கன்னு நாம யோசிக்க முடியாது. ஆனால் உண்மையிலேயே அதையெல்லாம் தாண்டி அவருக்கு பிடித்த நடிகர்..அவருடைய கலைப்பயணத்தில் முக்கியமான தூணாக இருந்த ஒருவரை பார்க்க விஜய் வந்திருக்கிறார்.
அந்த விடயத்தை தவிர்த்திருக்கலாம். அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடிக்கிறதுன்னு யாருக்குமே தெரியாது..நெறைய விடயங்கள் நடந்திருக்கு..அதனால் யாரு என்னனு நமக்கு தெரியாது' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |