நடிகர் விஷால் குறித்து அவதூறு.., யூடியூபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரபரப்பியதாக யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூடியூபர் மீது வழக்குப்பதிவு
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின்போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் யூடியூபர் சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யூடியூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார்.
நடிகர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை பொலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |