லட்சுமி மேனனுடன் திருமணம்? நடிகர் விஷால் கூறிய பதில்
நடிகை லட்சுமி மேனனுடன் விரைவில் திருமணம் நடப்பதாக பரவிய வதந்திக்கு நடிகர் விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம்?
நடிகர் விஷால் தொடர்பான வதந்திகளோ, செய்திகளோ சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், சமீப நாள்களாக நடிகை லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
அவர், நான் சிகப்பு மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் லட்சுமி மேனனுடன் நடிக்கும் போதே காதல் ஏற்பட்டுள்ளது என்று செய்தி பரவியது.
பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீங்க
திருமணம் குறித்த பேச்சுக்கு நடிகர் விஷால் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த பதிவில் அவர், "பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலி செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்று நான் நினைப்பேன். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால் நான் இதை மறுக்கிறேன். இது முற்றிலும் உண்மை மற்றும் ஆதாரமற்றது.
நான் இப்போது கொடுத்துள்ள எனது பதிலுக்குக் காரணம் என்னவென்றால், சம்மந்தப்பட்டவர் நடிகையாக இருப்பதை விட அவர் முதலில் பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்கிறீர்கள். அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.
ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை டிகோட் செய்ய எனது திருமணம் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.
Usually I don’t respond to any fake news or rumors about me coz I feel it’s useless. But now since the rumour about my marriage with Laksmi Menon is doing the rounds, I point blankly deny this and it’s absolutely not true and baseless.
— Vishal (@VishalKOfficial) August 11, 2023
The reason behind my response is only…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |