பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை: சதம் விளாசிய இருவர்..அபார வெற்றி
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
சிட்ரா அமின் சதம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிட்ரா அமின் (Sidra Amin) 100 ஓட்டங்களும், ஆயிஷா 49 ஓட்டங்களும் எடுக்க 273 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 1 ரன்னில் ஃபாத்திமா சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹர்ஷிதா, விஷ்மி சதம்
அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதாவுடன் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே இணைந்து வலுவான கூட்டணி அமைத்தார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne) 123 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 100 ஓட்டங்களும், கவிஷா தில்ஹரி 40 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |