தந்தை மற்றும் குழந்தையை சில நாள் இடைவெளியில் இழந்த பிரபல கிரிக்கெட் வீரர்! இறுதிச்சடங்கை மொபைலில் பார்த்த பரிதாபம்
தந்தை மற்றும் தனது பெண் குழந்தையை சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிரபல ரஞ்சி கிரிக்கெட் வீரர் அந்த சோகத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 11ம் திகதி கொரோனா தடுப்பு வளையத்தில் இருந்த விஷ்ணு சோலங்கி பரோடா அணியினருடன் இருந்தார், அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைத்தது.
ஆனால் அதிர்ச்சிகரமாக ஒருநாளே உயிரோடு இருந்தது அந்தப் பெண் குழந்தை. அது இறந்து போனதாக விஷ்ணு சோலங்கிக்கு அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது. இதனையடுத்து ஊருக்கு விரைந்த விஷ்ணு சோலங்கி பெங்காலுடனான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஊரிலிருந்து திரும்பிய சோலங்கி மீண்டும் அணியுடன் இணைந்தார். சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடத் தயாரானார். சண்டிகருக்கு எதிராக சதமெடுத்தார் சோலங்கி, பெண் குழந்தையை தொட்டுத் தூக்கக் கூட பாக்கியம் கிடைக்காத சோலங்கி இந்த சோகத்திலும் சதமெடுத்தது பலரையும் நெகிழச் செய்தது.
இப்படியிருக்கையில் நேற்று காலை தந்தை இறந்து விட்டதாக இடிபோல் செய்தி ஒன்று வந்திறங்கியது. உடல் நலக்குறைவினால் 2 மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சோலங்கியின் தந்தை சிகிச்சை பலனின்றி கடைசியில் உயிரிழந்தார்.
தந்தையின் இறுதிச் சடங்கை மொபைல் போன் வழியாகவே பார்க்க முடிந்தது. இரு வாரத்தில் பெண் குழந்தை, தந்தையை இறந்த துக்கத்தை அனுஷ்டிக்க பரோடா, அணி வீரர்கள், எதிரணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆடினர்.
மைதானத்தில் இருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊருக்கு செல்ல சோலங்கிக்கு அனுமதி கிடைத்தும் மார்ச் 3ம் திகதி ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய பிறகே ஊர் செல்வேன் என்று முடிவெடுத்தார் சோலங்கி.