இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஷ்ணு விஷால்! வெளியான தம்பதியின் அழகிய புகைப்படம்
நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், விளையாட்டு வீராங்கனை ஜூவலா கட்டாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஷ்ணு விஷால்.
இவருக்கு ரஜினி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் விஷ்ணு - ரஜினி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து விளையாட்டு வீராங்கனை ஜூவலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது.
ஜூவலா கட்டாவும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர். இந்த நிலையில் விஷ்ணு - ஜூவலா கட்டாவுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.