பிரித்தானியா வருவோர் இந்த விதியை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை-10,000 அபராதம்: எச்சரிக்கை அறிவிப்பு
பிரித்தானியாவில் அரசாங்க பயண விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம், அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியில் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குள் இரண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கொரோனா வைரஸின் சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகள், பிரித்தானிய அரசாங்கத்தால் அங்கீகரிப்பட்டுள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி அவர்கள் அதை மீறினா, புதிய விதிகளின் கீழ் அவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் சிவப்பு பட்டியல் நாட்டில் இருந்து வந்துவிட்டு, அதை மறைக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், இரண்டு கொரோனா சோதனைகளில், முதல் கட்டாய கொரோனா சோதனையை எடுக்கத் தவறியவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும், அதைத் தொடர்ந்து இரண்டாவது சோதனை எடுக்காமல் இருந்தால் அது 2,000 பவுண்ட் ஆக உயரும். .
இந்த கடுமையான விதிகள் குறித்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் இன்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், நாம் பொது சுகாதாரத்திற்கு வலுவான அச்சுறுத்தல்களில் ஒன்றை கையாண்டு வருகிறோம்
இந்த விதிகளை மீறும் மக்கள் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். பயணிகள் பயணிப்பதற்கு முன்னர் இந்த புதிய ஏற்பாடுகளுக்கு பயணிகள் பதிவுசெய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த சட்டத்தில் கடமை இருக்கும், மேலும் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இணங்காதவர்களுக்கு நாங்கள் கடுமையான அபராதம் விதிக்கிறோம். கட்டாய சோதனை எடுக்கத் தவறும் எந்தவொரு சர்வதேச பயணிக்கும் 1,000 பவுண்ட் அபராதம், இரண்டாவது கட்டாய சோதனை எடுக்கத் தவறும் எந்தவொரு சர்வதேச பயணிக்கு 2,000 பவுண்ட் அபராதம், அத்துடன் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை தானாக 14 நாட்களுக்கு நீட்டித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
அதுமட்டுமின்றி, நியமிக்கப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தத் தவறியவர்களுக்கு 5,000 பவுண்ட் நிலையான அது தொடர்ந்து மீறப்பட்டால் 10,000 பவுண்ட் ஆக உயர்கிறது.
பயணிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில், கடந்த 10 நாட்கள் எங்கிருந்தார்கள் என்பது குறித்த தகவலும், அதில், அவர்கள் கொரோனா காரணமாக சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை மறைத்தது தெரிந்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த கடுமையான விதிகளின் படி, வரும் பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்குவது, கொரோனா சோதனை மேற்கொள்வதற்கு போன்றவற்றிகு என 1750 பவுண்ட் செலுத்த வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

