உங்கள் இதயம் பலவீனமாக இருக்கா? எளிதாக காட்டி கொடுக்கும் 5 அறிகுறிகள்... உஷாராக இருந்துக்கோங்க
இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். தற்போதைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரையும் இதயநோய் தாக்குகிறது.
ஒரு சில அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இதயத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறியலாம். அப்படியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்து கொள்வது நலம்பெயர்க்கும்.
கைகள் வலி
இதயம் சரிவர இயங்காத போது பெரும்பாலும் ஆண்களுக்கு இடது கை வலிக்கும். ஆனால் பெண்களுக்கு இரு கைகளும் வலிக்குமாம். மேலும் இதயகுறைபாட்டால் மாரடைப்பு ஏற்பட்டால், பெண்களுக்கு வலது கை முழங்கையில் இனம்புரியாத வலி ஏற்படலாம்.
தொடர்ச்சியாக இருமல்
தொடர் இருமல் பலவிதமான உடல் உபாதைகளின் அறிகுறி என்றாலும் இதய நோயும் ஒருகாரணமாக இருக்கலாம். தொடர் இருமலுடன் இளம் சிவப்பான இரத்ததுடன் கூடிய திரவமும் வாயின் மூலம் வந்தால் அது கட்டாயம் இதய நோயை குறிக்கும். பயந்துடீகங்களா? இதய நோய் அப்படின்னா இதயம் அப்படியே நின்று விட்டது என்று அர்த்தமில்லை. ஏதோ பிரச்சினை இருக்குன்னு அர்த்தம்.
குமட்டல்
இதயசெயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களுக்கு பசியிருக்காது. குமட்டிக்கொண்டு வரும். சமயத்தில் கம்மியாக சாப்பிட்டாலும் இந்த அறிகுறிகள் இருக்கும். இதற்கு காரணம் கல்லீரல் மற்றும் குடலில் அதிகபடியான நீர்மம் சுரந்து விடுவதால் ஜீரணம் பாதிக்கப்படும். சரியாக யூகித்து விட்டீர்கள்... இந்த இரண்டும் தனியாக ஏற்படுவதில்லை கூடவே மேல் வயிற்று பகுதியில் வலி, வயிறு உப்புசம், வயிறு அப்படியே இழுத்துபிடித்து கொஞ்ச நேரம் வலிக்கும் அப்புறம் தானாக சரியாகி விடும். ஆனால் இது மாரடைப்பு வரும் முன் ஏற்படும் அறிகுறியாக கூட இருக்கலாம்.
படபடப்பு
சிறுவயது முதலே எதிலும் படபடப்பாகவே இருப்பவர்களுக்கு இருதய இரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது ஒரு ஆய்வு. படபடப்புக்கு காரணம் மன அழுத்தம், அடிக்கடி ஆபத்தான சூழ் நிலையில் சிக்கிக்கொள்வது, அவர்களுடைய தனிப்பட்ட ஆளுமைத்தன்மை, செய்ததையே திரும்பத் திரும்ப செய்வது மற்றும் காராணமே இல்லாமல் பயப்படுவது என்றும் சொல்லலாம்.
தோல் வெளிறி போதல்
பொதுவாக யாருக்காவது தோல் வெளிறி போனால் அது கண்டிப்பாக இதயகுறைபாடு காரணமாக இருக்கலாம். இதயம் சரியாக வேலை செய்யாததால் இரத்த ஓட்டம் குறைந்து தோல் வெளிறி போகிறது. தோலின் திசுக்களுக்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காததால் தோலின் நிறம் வெளுத்து போகிறது. அது போக திடீரென்று அதிர்ச்சிக்கு உள்ளாவதாலும் இரத்த ஓட்டம் குறைந்து தோல் வெளுத்து போகும். இதயம் நோய் உள்ளவர்களுக்கும் இந்த காரணத்தால் தோல் வெளுத்து போகும்.