பெருங்கண்ணீரோடு விடைபெற்றார் விவேக்! மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகளை செய்தது யார் தெரியுமா?
மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதிச்சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது மகள் அஸ்வினி செய்தார்.
இன்று அதிகாலை உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.
இதையடுத்து அவருடைய உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மேல் நடிகர் விவேக் உடல் அவரது இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
இதில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் ஆகியோர் கண்ணீருடன் பங்கேற்றனர்.
மேட்டுக்குப்பம் மையானத்தில் வைத்து நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறையினர் 78 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
நடிகர் விவேக்கின் சமூக சேவை மற்றும் கலைக்கு மரியாதை செய்யும் விதமாக அவருடைய உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, நடிகர் விவேக் உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேட்டுக்குப்பம் மின் மயானத்தி வைத்து நடிகர் விவேக் உடலுக்கு அவருடைய மனைவி, உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். அதன் பின்னர் நடிகர் விவேக் உடல் நல்ல முறையில் எரியூட்டப்பட்டது.
விவேக்கிற்கு இறுதிச்சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து மகள் அஸ்வினி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.