நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் உடல்
நடிகர் விவேக் இறுதி ஊர்வலம் சற்று நேரத்தில் தொடங்குகிறது. நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.
அவரின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்குகிறது. விருகம்பாக்கத்தில் விவேக் வீட்டில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானதுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் மாலை 5 மணிக்கு விவேக் உடல் தகனம் செய்யப்படுகிறது.
78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.