நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதுக்கு தடுப்பூசி காரணமா? மருத்துவமனை முக்கிய தகவல்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் திரையுலகில் மட்டுமின்றி தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக்கின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார்.
நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமாக இருக்மோ போன்ற ஊகஙக்ள சந்தேகங்கள் வதந்திகள் பரவி வருகின்றன.
இருப்பினும், தடுப்பூசிக்கும் மாரடைப்பு ஏற்பட்டதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.